Posts

Showing posts from February, 2022

டேர்ம் இன்சூரன்ஸை( Term Insurance) என்றால் என்ன? இது ஏன் அவ்வளவு முக்கியம்?டேர்ம் இன்சூரன்ஸை நீங்கள் தேர்வு செய்ய நாங்கள் உதவுகிறோம்.

Image
 Compiled By FINMISSION LLP,  (Sources-Times of India ) கால காப்பீடு அல்லது டெர்ம் இன்சூரன்ஸ் (Term Insurance) என்பது நீங்கள் இல்லாத சூழலிலும் உங்களது குடும்பத்துக்கு நிதிப் பாதுகாப்பு வழங்கும் அற்புதமான திட்டமாகும். குடும்பத்துக்கு பாதுகாப்பு ஏற்படுத்தித் தருவதற்கான மிக அடிப்படையான திட்டங்களில் டெர்ம் இன்சூரன்ஸ் முக்கியமானது. பாலிசிதாரர் இறந்துவிடும் சூழலில் அவரது குடும்பத்தினர் அல்லது அவரைச் சார்ந்திருப்போருக்கு பாதுகாப்பு வழங்க டெர்ம் இன்சூரன்ஸ் உதவுகிறது.  டெர்ம் இன்சூரன்ஸின் இதர பயன்கள் என்ன? 1) பிரீமியம்( Premium); டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களைப் பொறுத்தவரை குறைந்த பிரீமியத்துக்கு அதிக காப்பீடு கிடைக்கும். மாத வாரியாக, காலாண்டு வாரியாக அல்லது அரையாண்டு வாரியாக பிரீமியம் செலுத்தலாம். எவ்வளவு விரைவில் டெர்ம் இன்சூரன்ஸில் முதலீடு செய்கிறோமோ அதற்கு ஏற்ப பிரீமியம் குறையும். 2) முழு தொகை ( Full Claim amount disbursed) ; பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினர் அல்லது அவரை சார்ந்திருப்போருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட முழு தொகையும் வழங்கப்படும். இந்தத் தொகை ஒரே தவணையில் மொத்தமாகவோ,