டேர்ம் இன்சூரன்ஸை( Term Insurance) என்றால் என்ன? இது ஏன் அவ்வளவு முக்கியம்?டேர்ம் இன்சூரன்ஸை நீங்கள் தேர்வு செய்ய நாங்கள் உதவுகிறோம்.

 Compiled By FINMISSION LLP,  (Sources-Times of India )

கால காப்பீடு அல்லது டெர்ம் இன்சூரன்ஸ் (Term Insurance) என்பது நீங்கள் இல்லாத சூழலிலும் உங்களது குடும்பத்துக்கு நிதிப் பாதுகாப்பு வழங்கும் அற்புதமான திட்டமாகும். குடும்பத்துக்கு பாதுகாப்பு ஏற்படுத்தித் தருவதற்கான மிக அடிப்படையான திட்டங்களில் டெர்ம் இன்சூரன்ஸ் முக்கியமானது.

பாலிசிதாரர் இறந்துவிடும் சூழலில் அவரது குடும்பத்தினர் அல்லது அவரைச் சார்ந்திருப்போருக்கு பாதுகாப்பு வழங்க டெர்ம் இன்சூரன்ஸ் உதவுகிறது. 

டெர்ம் இன்சூரன்ஸின் இதர பயன்கள் என்ன?

1) பிரீமியம்( Premium);

டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களைப் பொறுத்தவரை குறைந்த பிரீமியத்துக்கு அதிக காப்பீடு கிடைக்கும். மாத வாரியாக, காலாண்டு வாரியாக அல்லது அரையாண்டு வாரியாக பிரீமியம் செலுத்தலாம். எவ்வளவு விரைவில் டெர்ம் இன்சூரன்ஸில் முதலீடு செய்கிறோமோ அதற்கு ஏற்ப பிரீமியம் குறையும்.

2) முழு தொகை ( Full Claim amount disbursed);

பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினர் அல்லது அவரை சார்ந்திருப்போருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட முழு தொகையும் வழங்கப்படும். இந்தத் தொகை ஒரே தவணையில் மொத்தமாகவோ, மாத வருமானம் போல பிரித்தோ பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் குடும்பத்தினருக்கு தேவையான பாதுகாப்பு கிடைக்கும்.

3)முக்கிய நோய்களுக்கு கட்டணம்(Critical Illness);

உங்கள் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தில் critical illness coverage இருந்தால், உங்கள் திட்டத்தில் கவர் செய்யப்பட்டுள்ள முக்கிய நோய்கள் (critical illness) உங்களுக்கு இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான தொகை செலுத்தப்படும்.

​4)விபத்து;

விபத்தால் மரணம் ஏற்பட்டால் உங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க (Accidental death benefit )வசதியை தேர்வு செய்துகொள்ளலாம்.

5)வரிச் சலுகைகள் ( Tax Benefits);

டெர்ம் இன்சூரன்ஸில் முதலீடு செய்பவர்களுக்கு சில வரிச் சலுகைகளும் கிடைக்கின்றன. டெர்ம் இன்சூரன்ஸ் பிரீமியத் தொகைக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரி சலுகை கிடைக்கிறது. மேலும், critical illness வசதிக்கு செலுத்தப்படும் பிரீமியத்துக்கும் வரி சலுகை கிடைக்கிறது. பாலிசிதாரர் இறந்துவிட்டால் குடும்பத்துக்கு செலுத்தப்படும் பணத்துக்கும் வரி விலக்கு உண்டு.

ஒரு திரைப்படம் பார்ப்பதற்கான செலவு = உங்கள் குடும்பத்தினரின் வாழ்நாள் பாதுகாப்பு ! ஒரு மிகச்சிறந்த டேர்ம் இன்சூரன்ஸை நீங்கள் தேர்வு செய்ய நாங்கள் உதவுகிறோம் !

ஒரு சினிமா பாக்கப் போறீங்க, நல்ல மல்டிப்ளெக்ஸ் தியேட்டர், பாப்கார்ன், கோக்னு குடும்பத்தோட என்ஜாய் பண்றீங்க, மினிமம் ஒரு 1000 ரூபாய்ல இருந்து 1500 ரூபாய் வரைக்கும் செலவாகுமா? தீபாவளி, பொங்கலுக்கு, பொறந்த நாளுக்குன்னு விலை உயர்ந்த டிரஸ் வாங்குறீங்க? ஒரு வருஷத்துல ஒரு ரெண்டு தடவ இந்த மாதிரி செலவுகள கொஞ்சம் கொறைச்சுக்கிட்டாப் போதும் அந்த செலவுல உங்க வாழ்க்கையைத் தாண்டி உங்க குடும்பத்தைப் பாதுகாக்கிற ஒரு டெர்ம் இன்சூரன்ஸை வாங்க முடியும்.

நம்ம வாழ்க்கைக்குப் பின்னாடியும், நம்ம அன்பானவங்க முகத்துல கவலைகள் படியிரத நம்ம யாரும் விரும்புறதில்ல, நீங்கன்னு இல்ல, நம்ம யாருமே அப்படி ஒரு விஷயத்த விரும்ப மாட்டோம் இல்லையா? மாசம் ஒரு 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரைக்கும் ஒரு நல்ல டெர்ம் இன்சூரன்சுக்காக செலவழிக்கிறது இந்தியா மாதிரி சமூகப் பாதுகாப்பு (Social Security) திட்டம் எதுவும் இல்லாத நாட்ல ரொம்ப முக்கியமான தேவைங்கிறத தயவு செஞ்சு யாரும் மறந்துராதீங்க, உங்க நண்பர்கள் வட்டத்தையும் இத உணர வைக்கிறது முக்கியம்.

இந்தியாவுல மிடில் கிளாஸ் மக்களோட வாழ்க்கைல மூணு முக்கியமான தருணங்கள் இருக்கு

 1) படிப்பையெல்லாம் முடிச்சு நீங்க வேலைக்குப் போறது,

 2) கல்யாணம் பண்ணி புதுசா இன்னொருத்தர உங்க வாழ்க்கைல இணைச்சுக்கிறது,

 3) பொறுப்பான ஒரு அம்மாவாகவோ / அப்பாவாகவோ மாறுறது. முதல் சூழல்ல உங்கள் பொறுப்பு உங்களுக்காக உழைச்ச உங்க அம்மா, அப்பா மேலே நீங்க காட்டுற அன்பு, அவங்களோட எதிர்காலத்தை சந்தோஷமா மாத்துறது, ரெண்டாவது உங்க அன்பு மனைவியோட எதிர்கால வாழ்க்கைய பாதுகாப்பா, மகிழ்ச்சியா மாத்துறது, மூணாவதா உங்க குழந்தைகளோட சிறப்பான கல்வி, அவங்க லைஃப் ஸ்டைல் எல்லாத்தையும் உறுதி பண்றது.

இந்த மூணு சூழல்லையும் நீங்க உங்க குடும்பத்த நேசிக்கிறீங்க, அவங்க பொருளாதார ரீதியா பாதிப்புகள சந்திக்கக்கூடாதுன்னு விரும்புறீங்க, அப்போ ஒரு பொருளாதார பாதுகாப்பு வழங்குற நம்பகமான டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்குறது தான் சரியான முடிவா இருக்கும், ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் வாங்கும் போது பிரீமியம் எவ்வளவுன்னு மட்டும் யோசிக்காதீங்க, மார்கெட்ல அந்த இன்சூரன்ஸ் கம்பெனியோட நம்பகத்தன்ம, அவங்க கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோ, அவங்க ஷேர் வேல்யூ மாதிரியான முக்கியமான விஷயங்களையும் பாக்கணும்.

-Source-( Moneypechu).

இப்போ உங்ககிட்ட என்னமாதிரியான பாலிசி இருக்கு, அது உங்க குடும்ப பாதுகாப்புக்கு பொருத்தமா இருக்குமா? புதுஷா ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் வாங்குற ஐடியா இருந்தும், சரியா யாரும் கைட் பண்ணலையேன்னு குழப்பத்துல இருக்கீங்களா? உடனே எங்க இன்சூரன்ஸ் ஆலோசகர தொடர்பு கொள்ளுங்க, உங்களுக்குத் பொருத்தமான, சரியான ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிய நீங்க எடுக்குறதுக்கு அவங்க வழிகாட்டுவாங்க.

டெர்ம் இன்சூரன்ஸ் தொடர்பான உங்களோட சந்தேகங்கள FINMISSION LLP மொபைல் நம்பரில் 9499979180 கூப்பிட்டுக் கேளுங்க, இல்லையா வாட்ஸப்ல உங்க கேள்விங்கள அனுப்புங்க.

FINMISSION FINANCIAL CONSULTANCY LLP operating under EZHILARASAN.M ( Chief Financial Consultant & Strategist) , who is an IRDAI registered Point of Insurance Service Provider.

Comments

Popular posts from this blog

Peripheral guidelines on purchasing Term Insurance(Life Insurance Cover).

A Financial Poem for Life :-)

A SIMPLIFIED GUIDE TO BUYING PERSONAL ACCIDENT INSURANCE